சேலத்தில் பெண்ணிடம் ரூ.10¾ லட்சம் மோசடி நகைக்கடை உரிமையாளர்கள் மீது வழக்கு


சேலத்தில்  பெண்ணிடம் ரூ.10¾ லட்சம் மோசடி  நகைக்கடை உரிமையாளர்கள் மீது வழக்கு
x

சேலத்தில் பெண்ணிடம் ரூ.10¾ லட்சம் மோசடி செய்தது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சேலம்

சேலம்,

மோசடி

சேலம் மன்னார்பாளையம் பிரிவு ரோடு பகுதியை சேர்ந்த சரஸ்வதி (வயது 42) என்பவர் சேலம் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுத்தார். அதில், சேலம் சின்னக்கடை வீதி பகுதியில் செயல்பட்டு வந்த நகைக்கடை ஒன்றில் பல்வேறு கவர்ச்சிக்கரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இதை நம்பி அந்த கடையின் உரிமையாளர்களான தங்கராஜ், லலிதா ஆகியோரிடம் ரூ.10 லட்சத்து 75 ஆயிரத்து 600 செலுத்தி முதலீடு செய்தேன். ஆனால் முதலீடு செய்த தொகை முதிர்வு அடைந்ததும் பணமோ அல்லது நகையோ அவர்கள் திருப்பி தராமல் ஏமாற்றினர். ஆகையால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

வழக்குப்பதிவு

அதன்பேரில் சரஸ்வதியிடம் மோசடி செய்த நகைக்கடையின் உரிமையாளர்கள் தங்கராஜ், லலிதா ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த நகைக்கடையில் பணம் முதலீடு செய்து ஏமாந்த பொதுமக்கள் அனைத்து அசல் ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையுடன் சேலம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story