Normal
கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த 5 பேருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி
கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த 5 பேருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்பட்டது.
கரூர்
கரூர்,
பிரதமர் நரேந்திர மோடி சைல்டு கேர் திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றால் இரண்டு பெற்றோர்களையும் இழந்த குழந்தைகளின் எதிர்காலத்திற்காக ரூ.10 லட்சம் கொரோனா நோய் தொற்று நிவாரண நிதி வழங்கும் திட்டத்தினை புதுடில்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த 5 பேருக்கு தலா ரூ.10 லட்சம் தபால் நிலைய வைப்பு தொகை பத்திரம், பி.எம். மருத்துவ அட்டை, பிரதம மந்திரி கடிதம், பேக் உள்ளிட்டவைகளை கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார். இதில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் குணசீலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story