'மகளிருக்கு ரூ.1,000 திட்டம் சாதனை அல்ல' சீமான் பரபரப்பு பேட்டி


மகளிருக்கு ரூ.1,000 திட்டம் சாதனை அல்ல சீமான் பரபரப்பு பேட்டி
x

மகளிருக்கு ரூ.1,000 திட்டம் சாதனையோ, மக்கள் சேவையோ அல்ல எனவும், மக்களை கையேந்தும் நிலையில்தான் வைத்திருக்கிறார்கள் எனவும் சீமான் தெரிவித்து உள்ளார்.

சென்னை,

மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை சாதனையான திட்டம் என்றோ? மக்களுக்கான சேவை என்றோ? கூற முடியாது. ½ நூற்றாண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி 2 திராவிட கட்சிகளும் தான் ஆட்சி செய்கிறது. மிகவும் அற்பமான, சொற்பத்தொகையான ஆயிரம் ரூபாய்க்கு கூட மக்களை கையேந்தும் வகையில்தான் இந்த ஆட்சியாளர்கள் வைத்திருக்கிறார்கள்.

ரூ.10 ஆயிரம் கோடி, ரூ.12 ஆயிரம் கோடி எதற்காக செலவு செய்கிறார்கள்? மகளிர் யாருமே ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று கேட்கவில்லை. சாலையை சரியாக கொடுங்கள். தூய குடிநீரை கொடுங்கள் என்றுதான் கேட்கிறார்கள். இதுதான் வளர்ச்சியா? ஆயிரம் ரூபாய்க்கு கையேந்தும் மக்கள் நாளை 5 ஆயிரம் ரூபாய்க்கு கையேந்துவார்களா? என் மக்களை இத்தனை ஆண்டுகளாக இலவசத்துக்கு கையேந்துபவர்களாக, பிச்சைக்காரர்களாக மாற்றி இருக்கிறீர்களே தவிர வளர்ச்சி அடைய வைக்கவில்லை.

எங்கே போனார்கள்?

இந்த ஆயிரம் ரூபாயை பெறுகிற பெண்கள் என்ன வளர்ச்சியை கண்டுவிடுவார்கள். மின்கட்டணம் என்ன விலைக்கு உயர்ந்துள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை என்ன? அரிசி, பருப்பு, பால், நெய் விலை எவ்வளவு? இந்த ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி செலவாகிறது என்றால் இந்த பணம் யாரிடமிருந்து எடுத்தீர்கள்? கலைஞர் உரிமை திட்டம் என்கிறீர்களே? இது என்ன கலைஞர் பணமா? இதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்வாரா?

2011-ல் கொடுத்த குற்றச்சாட்டிற்கு இப்போது எனக்கு சம்மன் கொடுக்கும் காவல்துறை அப்போது என்ன செய்து கொண்டிருந்தது? இவ்வளவு நாட்கள் எங்கே போனார்கள்?

தனலட்சுமி-தான்ய லட்சுமி

என்னைப்பற்றி புகார் தெரிவிக்க வீரலட்சுமி யார்? என்னிடம் வீரம் உள்ளது. பணம்தான் இல்லை. எனவே வீரலட்சுமி, விஜயலட்சுமிக்கு பதில் தனலட்சுமியையும், தான்ய லட்சுமியையும் அனுப்பி வையுங்கள்.

எனக்கு வேறு முகம் இருக்கிறது. இந்த முகத்தையே பார்க்க முடியவில்லை அந்த முகத்தை எப்படி பார்ப்பீர்கள். நான் யார் தெரியுமா? கேடுகெட்ட ரவுடி பயல். என்னை ஸ்கெட்ச் போட்டு தூக்குவேன் என்கிறீர்கள். ஒரு ஸ்கெட்ச் பேனாவை தூக்க முடியுமா? சீமான் என்றால் பானி பூரி, சோன் பப்டி விற்க வந்தவன் போல் நினைக்கிறீர்கள். நான் ஒரு லட்சம் துப்பாக்கியை தாண்டி என் தலைவனை பார்த்து வந்தவன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story