ரூ. 11 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


ரூ. 11 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 9 May 2023 12:15 AM IST (Updated: 9 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூம்புகார் விவசாயிகளுக்கு ரூ. 11 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் கலெக்டர் மகாபாரதி வழங்கினார்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

பூம்புகாரில் அமைந்துள்ள வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் மீன் வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள 125 விவசாயிகளுக்கு ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் மீன் பிடி வலைகள், மீன் தீவனம் உள்ளிட்ட பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நிறுவனத்தின் தலைவர் வேல்விழி தலைமை தாங்கினார். மயிலாடுதுறை மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் ராஜேஷ்குமார், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முத்துசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயி தென்னாம்பட்டினம் குணசேகரன் வரவேற்றார். மாவட்ட கலெக்டர் மகாபாரதி கலந்து கொண்டு விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர் ஸ்ரீதர், விவசாயிகள், மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர். முடிவில் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் பிரியங்கா நன்றி கூறினார்.


Next Story