பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம்
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர்
வேலூரில் பல்வேறு கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் எழுந்தன. அதைத்தொடர்ந்து 2-வது மண்டல சுகாதார அலுவலர் லூர்துசாமி தலைமையில் அதிகாரிகள் கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சத்துவாச்சாரி, ஆற்காடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை செய்யப்பட்டது. 45 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் பல கடைகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. அவர்களுக்கு ரூ.11 ஆயிரத்து 400 அபராதம் விதிக்கப்பட்டது. 151 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story