சேலம் கோட்டத்தில்ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் ரூ.12¼ கோடி அபராதம் வசூல்


சேலம் கோட்டத்தில்ரெயிலில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் ரூ.12¼ கோடி அபராதம் வசூல்
x

சேலம் ரெயில்வே கோட்ட பகுதியில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களிடம் ரூ.12¼ கோடி அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

சேலம்

சூரமங்கலம்

டிக்கெட் பரிசோதனை

சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில்களில் சேலம் ெரயில்வே கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்தவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க டிக்கெட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையொட்டி ெரயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வோர், லக்கேஜ் கட்டணம் எடுக்காமல் இருத்தல் போன்றவற்றை கண்டறிந்து டிக்கெட் பரிசோதகர்கள் 69 சதவீத அபராதத்துடன் கூடிய கட்டணத்தை வசூலித்து வருகின்றனர்.

ரூ.12¼ கோடி அபராதம்

அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து டிசம்பர் மாதம் வரையில் 9 மாத காலத்தில் டிக்கெட் பரிசோதனை மூலம் ரூ.12 கோடியே 26 லட்சத்து 23 ஆயிரத்து 832 அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

கடந்த நிதி ஆண்டில் இதே காலகட்டத்தில் ரூ.5 கோடியே 1 லட்சத்து 90 ஆயிரத்து 508 மட்டுமே அபராதம் வசூல் ஆகி இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ரெயில்வே கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:-

ரெயில்களில் பயணம் செய்பவர்கள் கட்டாயம் டிக்கெட் எடுத்து பயணம் செய்ய வேண்டும். அவ்வாறு தவறும் பட்சத்தில் அபராதம் செலுத்த வேண்டி இருக்கும். அல்லது இந்திய ெரயில்வே சட்டத்தின் படி சிறை தண்டனை விதிக்க நேரிடும். எனவே பயணிகள் தகுந்த பயணச்சீட்டு மற்றும் ெரயில்களில் கொண்டு செல்லும் லக்கேஜ்களுக்கு உரிய லக்கேஜ் கட்டணம் செலுத்தி ரெயில்வே துறைக்கு ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story