ஓய்வு பெற்ற பள்ளி முதல்வரிடம் ரூ.13 லட்சம் மோசடி
ஓய்வு பெற்ற பள்ளி முதல்வரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா தளபதிசமுத்திரம் ஆசீர்நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வவிநாயகம் (வயது 74). ஓய்வு பெற்ற பள்ளி முதல்வர். இவரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர் ஒருவர், வெளிநாட்டை சேர்ந்த காரை இந்தியாவில் முதல் முதலாக உங்களுக்கு வழங்க இருக்கிறோம். அதற்கு நீங்கள் முன்பணம் செலுத்த வேண்டும் என்று கூறி வங்கி கணக்கை அனுப்பி உள்ளனர். இதனை நம்பிய செல்வவிநாயகம் ரூ.13 லட்சத்தை 7 முறையாக பிரித்து அனுப்பி உள்ளார். அதன்பின்னர் அந்த மர்மநபரை தொடர்புகொள்ள முடியவில்லையாம். இதனால் தான் ஏமாற்றப்பட்டு இருப்பதை அறிந்த செல்வவிநாயகம் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story