ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ரூ.1.42 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்
பாவூர்சத்திரத்தில் ஆட்டோவில் கடத்தி வரப்பட்ட ரூ.1.42 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகில் ஆட்டோ ஒன்றில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக பாவூர்சத்திரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது ஆட்டோவில் வந்த நபர், ஆட்டோவை நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். போலீசார் அந்த ஆட்டோவில் சோதனை செய்தபோது, 336½ கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 42 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து புகையிலை பொருட்களை ஆட்டோவுடன் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். போலீஸ் விசாரணையில், ஆட்டோவில் புகையிலை பொருட்களை கடத்தி வந்தவர் பாவூர்சத்திரம் அருகே உள்ள சாலடியூர் மேலத்தெருவை சேர்ந்த திரவியம் மகன் முருகன் (வயது 40) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.