சேலத்தில் வியாபாரியிடம் ரூ.16 லட்சம் மோசடி-போலீசார் விசாரணை
சேலத்தில் வியாபாரியிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம் கோட்டை பகுதியை சேர்ந்தவர் அர்சத்ஜான் (வயது 40). இவர் பழைய வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடை நடத்தி வருகிறார். அர்சத்ஜான் ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து பழைய வாகனங்களின் உதிரி பாகங்களை வாங்கி அதை சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்து வருகிறார்.
சேலம் மேட்டு தெருவை சேர்ந்த உசைன் அலி (38) என்பவர் திருச்செங்கோட்டில் பழைய வாகன உதிரி பாகங்கள் விற்கும் கடை நடத்தி வருகிறார். அவருக்கு கடந்த 2015-16-ம் ஆண்டுகளில் ரூ.16 லட்சத்துக்கு அர்சத்ஜான் பழைய வாகனங்களின் உதிரி பாகங்களை சப்ளை செய்துள்ளார். ஆனால் அதற்கான பணத்தை கொடுக்கவில்லை. இந்த மோசடி குறித்து அர்சத்ஜான் சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி உசேன் அலி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.