மக்கள் நீதிமன்றத்தில் 175 வழக்குகளில் ரூ.2¾ கோடிக்கு தீர்வு
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மெகா மக்கள் நீதிமன்றம், இரண்டாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நவீன் துரை பாபு முன்னிலை வகித்தார்.
இதில் மொத்தம் 957 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் மோட்டார் வாகன விபத்து வழக்குகள்-53, காசோலை வழக்குகள்-2, சிறு வழக்குகள்-116, அசல் வழக்கு-1, வங்கி வழக்குகள்-3 என மொத்தம் 175 வழக்குகளில் சுமார் ரூ.2 கோடியே 87 லட்சத்து 25,260-க்கு தீர்வு காணப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆணைகள் வழங்கப்பட்டது.
இதில் வக்கீல்கள் அண்ணாதுரை, மனோகரன், கோபிநாத், செந்தில்நாதன் உள்ளிட்ட வக்கீல்களும், சட்ட உதவி அலுவலர் உள்ளிட்ட நீதிமன்ற ஊழியர்களும், பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story