மிளகு அனுப்புவதாக கூறி மசாலா நிறுவன உரிமையாளரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி


மிளகு அனுப்புவதாக கூறி   மசாலா நிறுவன உரிமையாளரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி
x

மிளகு அனுப்புவதாக கூறி மசாலா நிறுவன உரிமையாளரிடம் ரூ.2¼ லட்சம் மோசடி செய்யப்பட்டது.

ஈரோடு

ஈரோடு:

ஈரோடு பழையபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ வர்சன். இவருடைய மனைவி பத்மபிரியா (வயது 45). மசாலா நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் மசாலாவின் மூலப்பொருட்கள் தேவைக்காக மிளகு வாங்க ஆன்லைனில் ஒரு வலைத்தளத்தில் பார்த்து கொண்டிருந்தார். அப்போது, ஒரு நிறுவனத்தில் மிளகு இருப்பதாக இருந்த விளம்பரத்தை பார்த்து, 1 டன் மிளகிற்கு ஆர்டர் கொடுத்தார்.

பின்னர் அவர்கள் அனுப்பிய வங்கி கணக்கிற்கு கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந்தேதி ஆன்லைனில் வங்கி மூலம் ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800-ஐ பத்மபிரியா அனுப்பினார். ஆனால், சம்மந்தப்பட்ட நிறுவனத்தினர் மிளகு அனுப்பவில்லை.

இதைத்தொடர்ந்து மோசடி செய்யப்பட்டது குறித்து பத்மபிரியா ஈரோடு சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜானகி ராமனிடம் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட வங்கி கணக்கு முடக்கப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நடத்தி வருபவர் மூலம் பத்மபிரியா வழங்கிய ரூ.2 லட்சத்து 26 ஆயிரத்து 800 மீண்டும் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.


Related Tags :
Next Story