புதிய மின்கம்பங்கள் அமைக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்: உசிலம்பட்டி மின்செயற்பொறியாளர் கைது


புதிய மின்கம்பங்கள் அமைக்க  ரூ.20 ஆயிரம் லஞ்சம்: உசிலம்பட்டி மின்செயற்பொறியாளர் கைது
x

புதிய மின்கம்பங்கள் அமைக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உசிலம்பட்டி மின்செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

மதுரை

உசிலம்பட்டி

புதிய மின்கம்பங்கள் அமைக்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உசிலம்பட்டி மின்செயற்பொறியாளர் கைது செய்யப்பட்டார்.

புதிய மின்கம்பங்கள்

திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையைச் சேர்ந்தவர் சுப்புராஜ்(வயது 70). இவர் தனக்கு சொந்தமான எழுமலையை அடுத்துள்ள விட்டல்பட்டியில் பால் குளிரூட்டும் மையம் அமைக்க முடிவு செய்தார். இதற்காக அவர் மின் இணைப்பு பெறவும், புதிய மின் கம்பங்கள் அமைக்கவும் கடந்த மார்ச் மாதம் 29-ந் தேதி உசிலம்பட்டி டி.ராமநாதபுரம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் உசிலம்பட்டி துணை மின் செயற்பொறியாளர் அழகு மணிமாறனின்(55) பரிந்துரைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மின்செயற்பொறியாளர் அழகு மணிமாறன் மின் கம்பங்கள் அமைக்க பரிந்துரை செய்ய மனுதாரர் சுப்புராஜிடம் ரூ.40 ஆயிரம் வரை லஞ்சமாக கேட்டதாக கூறப்படுகிறது.

மின்செயற்பொறியாளர் கைது

இது குறித்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சுப்புராஜ் புகார் அளித்தார். இந்த நிலையில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனைபடி ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை முதற்கட்ட தொகையாக வழங்குவது போல சுப்புராஜ் கொடுத்துள்ளார். அந்த பணத்தை மின்வாரிய செயற்பொறியாளர் அழகு மணிமாறன் லஞ்சமாக வாங்கிய போது உசிலம்பட்டி துணை மின்நிலைய அலுவலகம் முன்பு மறைந்து நின்றிருந்த மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை சூப்பிரண்டு சத்தியசீலன் தலைமையிலான இன்ஸ்பெக்டர்கள் ஆம்புரோஸ், ஜெயராஜா மற்றும் போலீசார் அவரை கையும், களவுமாக கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story