சென்னை மாநகராட்சியில் குப்பை, கட்டடக் கழிவுகள் கொட்டியவர்களுக்கு ரூ.22 லட்சம் அபராதம்
சுவரொட்டிகள், குப்பை மற்றும் கட்டடக் கழிவுகள் கொட்டியவர்கள் மீது 22 லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த 7-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டியவர்கள் மீது 9 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்டடக் கழிவுகளை கொட்டியது தொடர்பாக 10 லட்சத்து 95 ஆயிரம் ரூபாயும், 451 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, 1 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story