சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்த ரூ.5 கோடி போதை பொருள் அழிப்பு
சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்த ரூ.5 கோடி மதிப்பிலான போதை பொருள்கள் அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கபட்டன.
சென்னை
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய சரக்ககப்பிரிவில் விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்களை, இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அழிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி விமான நிலையத்தில் சிக்கிய ரூ.5 கோடி மதிப்புள்ள 25 கிலோ கெட்டமைன் போதை பொருளை செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் உள்ள போதை பொருள் அழிக்கும் மையத்தில் உள்ள கருவி மூலம் சுங்க இலாகா மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் அழிக்கப்பட்டன.
மேற்கண்ட தகவலை சென்னை விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story