966 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி நலத்திட்ட உதவிகள்
கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 966 பயனாளிகளுக்கு ரூ.5 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி, ஆற்காடு, வாலாஜா, சோளிங்கர், அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம் ஆகிய 7 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் ராணிப்பேட்டை நகராட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் திமிரியில் 105 பேர், ஆற்காட்டில் 129 பேர், வாலாஜாவில் 171 பேர், விநாயகர் சிலை செய்ய மண்பாண்ட தொழிலாளர்கள் 25 நபர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம், சோளிங்கரில் 59 பேர், அரக்கோணத்தில் 30 பேர், நெமிலியில் 80 பேர், காவேரிப்பாக்கத்தில் 392 பேர் என மொத்தம் 966 பயனாளிகளுக்கு ரூ.5 கோடியே 12 லட்சத்து 80 ஆயிரத்து 789 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், ஏ.எம்.முனிரத்தினம், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றியக் குழு தலைவர்கள் வெங்கட்ரமணன், வடிவேலு, அசோக், புவனேஸ்வரி சத்தியநாதன், கலைக்குமார், நிர்மலா சவுந்தர், அனிதா குப்புசாமி, நகரமன்ற தலைவர்கள் தேவி பென்ஸ் பாண்டியன், முகமது அமீன், ஹரிணி தில்லை, சுஜாதா வினோத், தமிழ்ச்செல்வி அசோகன், லட்சுமி பாரி, பேரூராட்சி தலைவர்கள் மாலா இளஞ்செழியன், மனோகரன், சுந்தரம், நாகராஜன், ரேணுகாதேவி சரவணன், கவிதா சீனிவாசன், லட்சுமி நரசிம்மன், கலா சதீஷ் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள், ஒன்றியக் குழு துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள், நகர மன்ற துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள், பேரூராட்சி துணைத் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.