Normal
அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ரூ.5 லட்சத்தில் பேட்டரி கார்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் பேட்டரி காரை இந்தியன் வங்கி வழங்கியது.
கடலூர்
சிதம்பரம்,
75-வது சுதந்திர அமுத பெருவிழா திட்டம் மற்றும் சமுதாய பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் இந்தியன் வங்கி சார்பில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ- மாணவிகளுக்கு பயனளிக்கும் வகையில் அண்ணாமலை பல்கலைக் கழகத்திற்கு ரூ.5 லட்சம் மதிப்பில் 6 இருக்கைகள் கொண்ட பேட்டரி கார் வழங்கும் நிகழ்ச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் கடலூர் மண்டல மேலாளர் கவுரிசங்கர் ராவ் கலந்து கொண்டு அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசனிடம் பேட்டரி காரை ஒப்படைத்தார்.
அப்போது பல்கலைக்கழக பதிவாளர் சீத்தாராமன், இந்தியன் வங்கியின் அண்ணாமலை நகர் கிளை மேலாளர் சிவநாதன் மற்றும் வங்கி ஊழியர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story