1,000 பயனாளிகளுக்கு ரூ.50 கோடி கடன் உதவிகள்


1,000 பயனாளிகளுக்கு ரூ.50 கோடி கடன் உதவிகள்
x

திருப்பத்தூரில் 1,000 பயனாளிகளுக்கு ரூ.50கோடி மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் 1,000 பயனாளிகளுக்கு ரூ.50கோடி மதிப்பிலான கடன் உதவிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார்.

ரூ.50 கோடி கடன் உதவி

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் குறை தீர்வு கூட்டரங்கில் மாவட்ட அனைத்து வங்கிகளுடன் இந்தியன் வங்கி (முன்னோடடி வங்கி) இணைந்து வாடிக்கையாளர் கடன் தொடர்பு முகாம் நடத்தியது. இதில் 1,000 பயனாளிகளுக்கு ரூ.50 கோடி மதிப்பிலான பல்வேறு கடன் உதவிகள் மற்றும் 12 சிறந்த வங்கி வணிக தொடர்பாளர் விருதுகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா வழங்கினார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜி, ஏ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில் கலெக்டர் பேசியதாவது:-

காரணம் அறிய வேண்டும்

75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவினை முன்னிட்டு வங்கி வாடிக்கையாளர்கள் கடன் தொடர்பு முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் 2,071 பயனாளிகளுக்கு விவசாயக்கடன், சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோர் கடன், வீட்டுவசதி கடன், கல்வி கடன், வாகன வசதி கடன், தனிநபர் கடன் என்ற வகையில் ரூ.105.24 கோடி மதிப்பில் கடனுதவிகள் வழங்கப்பட உள்ளது.

முதல்-அமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அனைத்து வங்கிகளின் சார்பில் 1,500 பயனாளிகளுக்கு பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட உள்ளது. நமது மாவட்டத்தில் கல்வி கடன், தொழில் கடன், விவசாய கடன் போன்ற எந்த கடன் உதவிக்கு விண்ணப்பங்கள் குறைந்த அளவில் வந்துள்ளது, அதற்கு என்ன காரணம் என்று அறிந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு கடன் உதவிகள் வழங்கிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முகாமில் மாவட்ட ஊராட்சி தலைவர் என்.கே.ஆர்.சூரியகுமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வராசு, மகளிர் திட்ட இயக்குநர் உமாமகேஷ்வரி, நகரமன்ற தலைவர் சங்கீதா வெங்கடேஷ், வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தலைவர் ராஜேந்திரன், இந்தியன் வங்கி மண்டல துணை மேலாளர் ஹரிநாத், பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளர் மாமல்லன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அருண்பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story