ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடி
ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து தருவதாக ரூ.50 ஆயிரம் மோசடி
மதுரை
புதூர்
மதுரை ஒத்தக்கடை அருகே வளைச்சிகுலத்தைச் சேர்ந்தவர் நாச்சியப்பன் (வயது 40). விவசாயி. இவர் மேலூர் மெயின் ரோட்டில் உள்ள ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு நின்றிருந்த மர்ம ஆசாமி இவருக்கு பணம் எடுக்க உதவினார். பின்னர் சிறிது நேரத்தில் நாச்சியப்பன் செல்போனுக்கு 50 ஆயிரம் பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்தது. தன்னுடைய ஏ.டி.எம். கார்டை அந்த ஆசாமி அபகரித்து விட்டு வேறொரு ஏ.டி.எம். கார்டை கொடுத்திருந்தது தெரிய வந்தது. இது குறித்து ஒத்தக்கடை போலீசில் அவர் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியை பதிவு செய்து கொண்டு அந்த ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story