சென்னையில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ 500 அபராதம்...!


சென்னையில் பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ 500 அபராதம்...!
x

சென்னையில் பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை, தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. எனவே முககவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற உத்தரவுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டு உள்ளன. முககவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும் சென்னையில் பெரும்பாலான மக்கள் முககவசம் அணியாமல் அலட்சியத்துடன் வெளியே சென்று வருகின்றனர். இந்தநிலையில் சென்னை மக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் சென்னை மாநகரில் உள்ள 15 மண்டலங்களிலும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதை உறுதிப்படுத்த மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில்,

சென்னை மாநகராட்சி பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மாஸ் அணியாவிட்டால் ரூ 500 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

*சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணியாவிட்டால் நாளை முதல் ரூ.500 அபராதம் வசூலிக்கப்படும்.

*2-ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இணைநோய் உள்ளவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.

* மார்க்கெட் பகுதிகள், அங்காடிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும்.

*வணிக வளாகம், திரையரங்கம், மார்க்கெட் பகுதிகளில் மாஸ்க் அணியாவிடில் அபராதம் விதிக்கப்படும்.

*அங்காடிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

*வணிக நிறுவனங்களில் ஊழியர், வாடிக்கையாளர் மாஸ்க் அணிந்திருப்பதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாநகராட்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


Next Story