பொங்கல் பண்டிகையையொட்டி போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ரூ.7 கோடி ஊக்கத்தொகை


பொங்கல் பண்டிகையையொட்டி போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு ரூ.7 கோடி ஊக்கத்தொகை
x

பொங்கல் பண்டிகையையொட்டி போக்குவரத்துக்கழக பணியாளர்களுக்கு மொத்தம் ரூ.7 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு நிறுவனங்களில் தற்போது சுமார் ஒரு லட்சம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும், பணியாளர்களில், 2022-ம் ஆண்டில் 91 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு பொங்கல் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

ரூ.7 கோடி

அதன்படி 151 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய் வீதமும், 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய் வீதமும், 200 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதமும் வழங்கப்படும்.

இதன்மூலம் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 129 பணியாளர்களுக்கு, மொத்தம் 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story