ரூ.7.63 லட்சம் வாடகை பாக்கி: நெல்லையப்பர் கோவில் குடியிருப்பு மீட்பு


ரூ.7.63 லட்சம் வாடகை பாக்கி: நெல்லையப்பர் கோவில் குடியிருப்பு மீட்பு
x

ரூ.7.63 லட்சம் வாடகை பாக்கி செலுத்தாததால் நெல்லையப்பர் கோவில் குடியிருப்பு மீட்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை டவுன் காவல்பிறை தெருவில் நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலுக்கு சொந்தமான பணியாளர் குடியிருப்பு உள்ளது. இங்கு ஒரு குடியிருப்பை 2 பேர் பயன்படுத்தி வந்தனர். அந்த கட்டிடத்துக்கு ரூ.7 லட்சத்து 63 ஆயிரத்து 530 வாடகை பாக்கி வைத்துள்ளனர். இதுதொடர்பாக இந்து சமய அறநிலைய துறை இணை ஆணையர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அதில் ஆக்கிரமிப்பில் இருந்து கட்டிடத்தை மீட்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதையடுத்து அறநிலையத்துறை உதவி ஆணையாளர் கவிதா முன்னிலையில் நேற்று அந்த குடியிருப்பு கட்டிடம் மீட்கப்பட்டது. பின்னர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி வசம் ஒப்படைக்கப்பட்டு, குடியிருப்பு பூட்டி சீல் வைக்கப்பட்டது. அப்போது சூப்பிரண்டு சுப்புலட்சுமி, மேற்கு பிரிவு ஆய்வாளர் தனலட்சுமி என்ற வள்ளி, நெல்லை வருவாய் ஆய்வாளர் லட்சுமண பாண்டியன், கிராம நிர்வாக அலுவலர் பொன் அய்யப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திரா, கோவில் வக்கீல் செல்வம் மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



Next Story