சேலம் ரெயில்வே கோட்டத்தில் ரூ.778 கோடி வருமானம்-மேலாளர் தகவல்


சேலம் ரெயில்வே கோட்டத்தில் ரூ.778 கோடி வருமானம்-மேலாளர் தகவல்
x

சேலம் ரெயில்வே கோட்டத்துக்கு ரூ.778 கோடி வருமானம் வந்துள்ளதாக கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் தெரிவித்தார்.

சேலம்

சூரமங்கலம்:

குடியரசு தின விழா

சேலம் ெரயில்வே கோட்ட அலுவலகத்தில் நேற்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. ெரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் சிவலிங்கம், சேலம் கோட்ட பாதுகாப்பு உதவி கமிஷனர் ரதீஷ்பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் ெரயில்வே கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து ெரயில்வே பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் சேலம் கோட்ட மேலாளர் கவுதம் ஸ்ரீனிவாஸ் பேசும் போது கூறியதாவது:-

சேலம் ரெயில்வே கோட்டம் ரூ.4 கோடியே 30 லட்சம் வருவாய் ஈட்டியுள்ளது. கோட்ட வரலாற்றில் முதன்முறையாக 3 மில்லியன் டன் சரக்கு ஏற்றுதலை தாண்டி 2021-2022 ம் ஆண்டில் 3 ஆயிரத்து 269 மில்லியன் டண்களை ஏற்றி சாதனை புரிந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் அதிகபட்சமாக ரூ.274.33 கோடி சரக்கு வருவாய் ஈட்டி உள்ளது. இது முந்தைய ஆண்டை விட 18.98 சதவிகிதம் அதிகமாகும்.

டிக்கெட் பரிசோதனை வருவாய்

2022- 2023 ல் சேலம் கோட்டத்தின் மொத்த வருவாய் ரூ.778 கோடி ஆகும், இது கடந்த ஆண்டை விட 53.8 சதவிகிதம் அதிகம். பயணிகள் 87 சதவீதம் அதிகமாகவும், பார்சல் வருவாய் 12 சதவீதம் அதிகமாகவும், டிக்கெட் பரிசோதனை சோதனையில் வருவாய் கடந்த ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 69 சதவீதம் அதிகமாக உள்ளது. இது அனைத்து பிறவிகளிலும் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் ரெயில்வே பாதுகாப்பு படையினரின் சாகச நிகழ்ச்சிகள், மோப்ப நாய் சாகச நிகழ்ச்சி,ரெயில்வே தொழிலாளர்கள், பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ெரயில்வே உயர் அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story