ரூ. 27 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை


ரூ. 27 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புங்கனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ. 27 லட்சத்தில் புதிய கட்டிடம் கட்ட பூமிபூஜை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றியம் புங்கனூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்காக பூமிபூஜை நடைபெற்றது. விழாவிற்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உஷா நந்தினி பிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் விஜயேஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுனைதாபேகம் கமாலுதீன் வரவேற்றார். விழாவில் குழந்தைகள் நேய பள்ளி மேம்பாடு திட்டத்தின் கீழ் புதிதாக ரூ.27 லட்சம் மதிப்பில் 2 புதிய வகுப்பறை கட்டுவதற்கான கட்டுமான பூமிபூஜையை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பிரபாகரன், நகர செயலாளர் சுப்பராயன் மற்றும் ஒன்றிய துணை செயலாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், கிராம தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story