ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் 8-வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்-கவுன்சிலர் பத்மினி கருப்பையா வலியுறுத்தல்


ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் 8-வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்-கவுன்சிலர் பத்மினி கருப்பையா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 15 Jan 2023 12:15 AM IST (Updated: 15 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் 8-வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கவுன்சிலர் பத்மினி கருப்பையா வலியுறுத்தி உள்ளார்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் 8-வது வார்டில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கவுன்சிலர் பத்மினி கருப்பையா வலியுறுத்தி உள்ளார்.

8-வது வார்டு கவுன்சிலர்

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் 8-வது வார்டு ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் பத்மினி கருப்பையா. இவர் தனது வார்டுக்குட்பட்ட பாரனூர், கொத்திடல் -களக்குடி, ஊரணங்குடி ஆகிய கிராம ஊராட்சி பகுதிகளில் மக்கள் நலத்திட்டங்களை கடந்த 3 ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறார்.தனது கணவர் கருப்பையா ஒத்துழைப்புடன் மக்கள் பணியாற்றி வருகிறார். இது குறித்து அவர் கூறியதாவது:-

பாரனூர் கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் அமைந்துள்ள சாலையில் பேவர் பிளாக் சாலை, .ஆவரேந்தல் கிராமத்தில் மாரியம்மன் கோவில் செல்லும் சாலை பேவர் பிளாக் அமைத்துள்ளேன்.

ஆவரேந்தல் கிராமத்தில் கழிவுநீர் கால்வாய் மாவட்ட ஊராட்சி குழு 15-வது நிதி குழு மானிய நிதியிலிருந்து அமைக்கப்பட்டு உள்ளது. ஆவரேந்தல் கிராமத்தில் பள்ளியில் கழிப்பறை மராமத்து பணி செய்துள்ளோம். மயிலூரணி கிராமத்தில் குடிநீர் ஊருணியில் படித்துறை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. பாரனூர் கிராமத்தில் கிழக்குத் தெரு மற்றும் வடக்கு தெரு குடிநீர் குழாய் இணைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.திருநகர் காலனியில் குடிநீர் இணைப்பு விரிவாக்கபணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

சாலை அமைக்க கோரிக்கை

பாரனூர் குடிநீர் ஊருணியில் தடுப்புச்சுவர் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரிடமும், ஊராட்சி ஒன்றிய குழு தலைவரிடமும், ஆணையாளரிடமும் பாரனூர் ஆதிதிராவிடர் மயான சாலை தெற்கு வடக்கு பகுதிகளில் தார் சாலை அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளோம். கொத்திடல் கிராமத்துக்கு செல்ல உப்பூர்- ஆவரேந்தல் சாலையில் இருந்து கொத்திடல் கிராமம் வரை தார்சாலை தொடங்க வேண்டும் என்று கலெக்டர், யூனியன் ஆணையாளிரிடமும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் கடை

தெற்கு ஊரணங்குடி கிராமத்தில் படித்துறை அமைக்கவும், சாலை அமைக்கவும் கோரிக்கை விடுத்து உள்ளோம். பாரனூர் கிராமத்தில் சுமார் 400 குடும்பங்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். பாரனூர், கலங்காபுலி, ஆவரேந்தல் ஆகிய கிராமங்களில் புதிதாக ரேஷன் கடை கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

பாரனூர் கிராமத்தில் கலையரங்கம் அமைக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது. பாரனூர் கிராமத்தில் கிராம சுகாதார அலுவலகம் உள்ளது. அங்கு செவிலியர்கள் தங்கி மருத்துவ பணி மேற்கொள்ள முடியாத அளவிற்கு அந்த கட்டிடம் மிகவும் பழுதடைந்து உள்ளது. அந்த கட்டிடத்ைத சீரமைக்க வலியுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story