திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் 2 பக்தர்களிடம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் அபேஸ்


திருப்பரங்குன்றம் கோவிலுக்குள்  2 பக்தர்களிடம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் அபேஸ்
x

திருப்பரங்குன்றம் கோவிலுக்குள் 2 பக்தர்களிடம் ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

மதுரை

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கடந்த 3-ந் தேதி முகூர்த்ததினம் என்பதால் திருமண ஜோடிகள் மற்றும் திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் என்று கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த பரஞ்சோதி (வயது 51) தனது உறவினர் வீட்டு திருமண விசேஷத்திற்கு மொய் செய்வதற்காக பையில் ரூ.1 லட்சத்து 13 ஆயிரம் வைத்து இருந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றனர்.

இதேபோல விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்த பெருமாள் (72) வைத்திருந்த ரூ.11 ஆயிரத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த 2 திருட்டு சம்பவம் குறித்தும் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.


Next Story