முயலை வேட்டையாடி சமைத்த 5 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்


முயலை வேட்டையாடி சமைத்த 5 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 25 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-26T00:16:55+05:30)

கடையம் அருகே, முயலை வேட்டையாடி சமைத்த 5 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே, முயலை வேட்டையாடி சமைத்த 5 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

ரோந்து

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பை கோட்டம் கடையம் வனச்சரகத்திற்கு வெளிமண்டல பகுதியான ஆம்பூர் பீட் பகுதியில் கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ராமச்சந்திரபுரத்தை சேர்ந்த ராஜீவ்காந்தி, சூரியநாராயணன், சரவணன், பிரபாகரன், முருகன் ஆகிய 5 பேர் வேட்டைக்கு சென்று காட்டு முயல் மற்றும் காடை, கவுதாரியை கொன்று சுத்தம் செய்து சமைத்துக் கொண்டிருந்தனர்.

அபராதம்

இதையடுத்து 5 பேரையும் வனத்துறையினர் பிடித்து, விசாரணை நடத்தினர்.

பின்னர் துணை இயக்குனர் செண்பகப்பிரியா உத்தரவின் பேரில் தலா ரூ.20 ஆயிரம் வீதம் 5 பேருக்கும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.Next Story