திருப்பத்தூர் பகுதியில் பால் லிட்டருக்கு ரூ.10 உயர்வு
திருப்பத்தூர் பகுதியில் இன்று முதல் பால் லிட்டருக்கு ரூ.10 உயர்கிறது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் ஒரு லிட்டர் பால் ரூ.40க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) முதல் ஒரு லிட்டர் பால் ரூ.50-க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாட்டு தீவனங்கள் விலை உயர்ந்ததால் பால் விலையை ரூ.40ல் இருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே இதுவரை ஆதரவு அளித்து வந்த பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தர வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள், திருப்பத்தூர் என துண்டு பிரசுரம் நகர பகுதி முழுவதும் வழங்கப்பட்டு உள்ளது. .
ஏற்னவே அத்தியாவசிய பொருட்களில் விலை பல மடங்கு உயர்ந்துள்ள நிலையில் திடீரென பால் விலையும் லிட்டருக்கு ரூ.10 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story