ராணிப்பேட்டையில் ரூ.13 கோடியில் நடைபெறும் பணிகள்; கலெக்டர் தகவல்


ராணிப்பேட்டையில் ரூ.13 கோடியில் நடைபெறும் பணிகள்; கலெக்டர் தகவல்
x

ராணிப்பேட்டையில் ரூ.13 கோடியில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் விரைவில் பன்பாட்டுக்கு வரும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் ரூ.13 கோடியில் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த பணிகள் விரைவில் பன்பாட்டுக்கு வரும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

பஸ் நிலையம்

ராணிப்பேட்டை நகராட்சியில் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் திட்டத்தின் கீழ் ரூ.10 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் 15 எண்ணிக்கைகள் பஸ் நிறுத்தம் கொண்ட சி பிரிவு புதிய பஸ் நிலையம் கட்டுமான பணிக்கு அடித்தளம் அமைக்கப்பட்டு மண் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி 30.7.23-ல் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

பிஞ்சி ஏரி புனரமைப்பு

நமக்கு நாமே திட்டம் 2021-2022-ன் கீழ் பிஞ்சி ஏரி புனரமைக்கும் பணி ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 50 சதவீதம் பொதுமக்கள் பங்களிப்புடன் கூடிய பணியாக இத்திட்டத்தின் மூலம் நடைபெற்று வருகிறது. இப்பணி ஏரியினை தூர்வாரி ஆழப்படுத்துதல் மற்றும் கரைகள் அமைத்தல் உள்ளடக்கியது. இப்பணி 31.3.23-ல் முழுமையாக முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அறிவுசார் மையம்

கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022-ன் கீழ் ரூ.1 கோடியே 15 லட்சம் மதிப்பீட்டில் ரெயில்வே ஸ்டேஷன் சாலையில் நூலகத்துடன் கூடிய அறிவுசார்மையம் அமைக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. இப்பணி 28.2.23-ல் முழுமையாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இப்பணியில் தற்போது முகப்பு வடிவமைப்பு, மின் இணைப்பு மற்றும் வண்ணப்பூச்சு ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.

பொதுக்கழிப்பிடம்

தூய்மை இந்தியா திட்டம் 2022-2023-ன் கீழ் சந்தைமேடு பகுதியில் புதிய பொதுக்கழிப்பிடம் கட்டும் பணி ரூ.36 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வருகிறது. இப்பணி 28.2.23-ல் முழுமையாக முடிந்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story