மின் விதிமீறலில் ஈடுபட்ட 2 பேருக்கு ரூ.14 ஆயிரம் அபராதம்


மின் விதிமீறலில் ஈடுபட்ட 2 பேருக்கு ரூ.14 ஆயிரம் அபராதம்
x

மின் விதிமீறலில் ஈடுபட்ட 2 பேருக்கு ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் உட்பட்ட கீழப்பழுவூர் மின்வாரிய பிரிவு அலுவலக கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் மின் வினியோகப் பிரிவுகளில் உள்ள வீடுகள், தொழிற்கூடங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் உள்ள மின் இணைப்புகளில் மின் விதிமீறல்கள் உள்ளதா? என நேற்று மின்வாரியத்துறை சார்பில், 25 குழுக்களாக பிரிந்து சுமார் 2,500 மின் இணைப்புகளை ஆய்வு செய்தனர். இதில் 2 இடங்களில் குடியிருப்புகளுக்கான மின் இணைப்பு பெறப்பட்டு, அவற்றில் தொழில் சார்ந்த வேலைகளில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து இந்த 2 மின் இணைப்புதாரர்களுக்கும் சேர்த்து மொத்தம் ரூ.14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இது போன்ற மின் விதி மீறல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று மின்வாரிய அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.


Next Story