ரூ.23.40 லட்சம் கோவில் நிலம் மீட்பு


ரூ.23.40 லட்சம் கோவில் நிலம் மீட்பு
x

சேரன்மாதேவி பகுதியில் ரூ.23.40 லட்சம் மதிப்பிலான கோவில் நிலம் மீட்கப்பட்டது.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

சேரன்மாதேவி, கிரியம்மாள்புரம் ஆகிய பகுதிகளில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நன்செய் நிலங்கள் உள்ளன. இவற்றை குத்தகைக்கு எடுத்தவர்கள் பல ஆண்டுகளாக குத்தகை பாக்கித்தொகை செலுத்தவில்லை. இதையடுத்து திருச்செந்தூர் கோவில் இணை ஆணையர் தலைமையில், கோவில் அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள், போலீசாரின் பாதுகாப்புடன் மொத்தம் ரூ.23.40 லட்சம் மதிப்பிலான 4.68 ஏக்கர் நிலங்களை மீட்டனர்.


Next Story