ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது


ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே ரூ.3 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; வியாபாரி கைது

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் அருகே உள்ள குட்டக்குழி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே திருவட்டார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது. அதில் புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வட்டவிளை ரமேஷ்மணி (வயது 43)என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த ரூ.3 லட்சம் மதிப்புள்ள புகையிலையையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது ரமேஷ்மணி மளிகை கடையில் வைத்து விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்களை கொண்டு சென்றது தெரிய வந்தது. அவரிடம் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல் காதர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்..


Next Story