மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்


மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

மயிலாடுதுறை

திருவெண்காடு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

பேட்டி

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக சட்ட சபை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.இதைத்தொடர்ந்து தலைச்சங்காடு பகுதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழக முழுவதும் 1.5 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளநீர் வடியாததால், பல இடங்களில் பயிர்கள் அழுகி வருகின்றன. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் குறித்து அதிகாரிகள் கவனத்துடன் விடுபடாமல் கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.

ரூ.3 ஆயிரம்

பயிர்க்காப்பீட்டு செய்ய காலக்கெடுவை நீட்டித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாவில் வசிக்கும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.1000 நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த நிவாரணத் தொகை போதுமானதாக இல்லை. எனவே ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ. 3 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இந்த நிவாரணத் தொகையை வழங்க வேண்டும்.

திருவாலி ஏரி

நான் ( எடப்பாடி பழனிசாமி) முதல்-அமைச்சராக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் முடக்கப்படுகிறது. குறிப்பாக சீர்காழி அருகே உள்ள திருவாலி ஏரியை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்தேன். அந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. தமிழக மக்கள் மகிழ்ச்சி இல்லாமல் உள்ளனர்.வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைவது உறுதி. டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க.வை எங்கள் கூட்டணியில் இணைக்க ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை.தமிழகத்தில் போதைப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. இதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story