ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணியையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஆயிரம் போலீசார் குவிப்பு


ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணியையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஆயிரம் போலீசார் குவிப்பு
x

பெரம்பலூரில் இன்று நடைபெறும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணியையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பெரம்பலூர்

தமிழகத்தில் கடந்த மாதம் 2-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அணிவகுப்பு நடைபெற இருந்தது. ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதால், அதற்கு அனுமதி வழங்க தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்தது. இதனை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழகத்தில் நவம்பர் 6-ந்தேதி ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த, அதற்கான நிபந்தனைகளை விதித்து அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டது. ஆனால் பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பேரணி நடத்த காவல்துறை சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. மற்ற இடங்களில் பேரணி நடத்த அனுமதி மறுத்தது.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டு நேற்று முன்தினம் மேலும் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. ஆனால் அந்த 44 இடங்களில் நடைபெற இருந்த பேரணியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தள்ளிவைத்தது. இதைத்தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற உள்ளது.

பெரம்பலூரில் இன்று மாலை 3 மணியளவில் பாலக்கரை ரவுண்டானாவில் இருந்து ஆர்.எஸ்.எஸ். பேரணி புறப்படுவதாகவும், பின்னர் வெங்கடேசபுரம், ரோவர் வளைவு வழியாக எளம்பலூர் சாலைக்கு சென்று, அங்கிருந்து காமராஜர் வளைவு வழியாக சங்குபேட்டைக்கு வந்து கடைவீதி வழியாக மேற்கு வானொலி திடலில் ஆர்.எஸ்.எஸ். பேரணி நிறைவடையதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ். பேரணியை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் பெரம்பலூரில் சுமார் ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.


Next Story