தாராபுரம், வெள்ளகோவிலில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம், வெள்ளகோவிலில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாராபுரம்
தாராபுரம், வெள்ளகோவிலில் ஓய்வு பெற்ற சத்துணவு ஊழியர்கள் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கையில் தட்டு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் லிவிங்ஸ்டன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச பென்ஷன் ரூ.7,850 தொகை வழங்க வேண்டும்., அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் மேகவர்ணன், அங்கன்வாடி சத்துணவு ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பால்ராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜூ, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் ஈஸ்வரமூர்த்தி, மூலனூர் ஒன்றிய தலைவர் குப்புசாமி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஒய்வூதியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் மணியன், ஒன்றிய பொருளாளர் விஜயகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வெள்ளகோவில்
வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்தில் வெள்ளகோவில் வட்டாரத்தில் உள்ள தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியதினர் கலந்து கொண்டனர்.
---