மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆறுதல்
பாளையங்கோட்டை அருகே மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஆறுதல் கூறினார்.
திருநெல்வேலி
இட்டமொழி:
பாளையங்கோட்டை கிழக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட உடையார்குளம் பஞ்சாயத்தில் உள்ள வாகைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமி (வயது 55). விவசாயியான இவர் சில தினங்களுக்கு முன்பு மேய்ச்சலுக்கு விட்டிருந்த கால்நடைகளை அழைத்து வந்தபோது மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந் சம்பவத்தை அறிந்த ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., வாகைகுளம் கிராமத்திற்கு நேரில் சென்று, லட்சுமிைய இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு உதவித்தொகையும் வழங்கினார். நிகழ்ச்சியில், நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, கட்சி நிர்வாகி புத்தனேரி சண்முகம், மாவட்ட துணைத்தலைவர் செல்லப்பாண்டி, வட்டார காங்கிரஸ் தலைவர் கனகராஜ், மாவட்ட பொதுச்செயலாளர் நம்பித்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story