ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ருத்ர ஜப ஹோம பூஜை
ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ருத்ர ஜப ஹோம பூஜை நடந்தது.
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஸ்ரீருத்ர ஜப ஹோம பூஜை நடைபெற்றது. குபேர தலமான இக்கோவிலில் உலக நன்மை வேண்டியும், கொடிய வியாதிகள் நீங்கவும், கடன் நிவர்த்தி வேண்டியும் நடைபெற்ற இந்த பூஜையையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் ஏகாம்பரேஸ்வரர், பிரியாவிடை அம்மன், காமாட்சியம்மன், சண்டிகேஸ்வரர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதைத்தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு மூலிகைப் பொருட்கள் கொண்டு ஹோம பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுப்புறத்தில் உள்ள கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.