திருப்பத்தூரில் மினி மாரத்தான் ஓட்டம்
திருப்பத்தூரில் மினி மாரத்தான் ஓட்டம் நாளை நடக்கிறது.
திருப்பத்தூர்
பொது சுகாதாரத்துறை நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக திருப்பத்தூரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு மினி மாரத்தான் ஓட்டம் நடக்கிறது. கலெக்டர் அமர்குஷ்வாஹா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு துறை அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள், பொது மக்கள் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க உள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி, பஸ் நிலையம், தாலுகா அலுவலகம், புதுப்பேட்டை ஜங்ஷன் ரோடு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ள திருப்பத்தூர்- தருமபுரி பிரதான சாலையில் தனியார் பள்ளி வரை சென்று முடிவடைகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதில் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கலெக்டர் அமர்குஷ்வாஹா கேட்டுக்கொண்டுள்ளார்.
Related Tags :
Next Story