கண்டன்சிறை கால்வாயில் உடைப்பு


கண்டன்சிறை கால்வாயில் உடைப்பு
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் மலையோர பகுதிகளில் கனமழை பெய்ததால் கண்டன்சிறை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.

கன்னியாகுமரி

அருமனை:

குமரியில் மலையோர பகுதிகளில் கனமழை பெய்ததால் கண்டன்சிறை கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.

கால்வாயில் உடைப்பு

குமரி மாவட்டத்தில் நேற்று அருமனை மற்றும் மலையோர பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்தது.

இதனால் மாங்கோடு மலையில் இருந்து உருவாகும் கண்டன்சிறை கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதில் அருமனை, வெள்ளாங்கோடு, சிதறால் ஆகிய இடங்களில் திடீரென உடைப்புகள் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே அதிலிருந்து வெளியேறிய தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்தது.

பயிர்கள் நீரில் மூழ்கின

இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. இந்த பகுதியில் வாழை, மரச்சீனி, ரப்பர் மற்றும் கிழங்கு வகைகள் பயிரிடப்படுகிறது. மழைக்காலங்களில் கண்டன் சிறை கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் ஆண்டுதோறும் விவசாய பயிர்கள் அழிந்து வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெருமளவு சேதம் ஏற்படுகிறது.

எனவே கண்டன் கால்வாயில் உடைப்புகள் ஏற்படாதாறு கரையை பலப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story