தூத்துக்குடியில்ஊரகவளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தூத்துக்குடியில்ஊரகவளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Jan 2023 12:15 AM IST (Updated: 31 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில்ஊரகவளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க மாவட்ட துணைத்தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் வே.கருப்பசாமி, எம்.வெள்ளைச்சாமி, மாவட்ட குழு உறுப்பினர் தங்கமாடசாமி, மாவட்ட பொருளாளர் நேருஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறபபு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் முனியசாமி கலந்து கொண்டு பேசினார்.

கோரிக்கைகள்

ஆர்ப்பாட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் அரசு உத்தரவுப்படி அனைத்து பஞ்சாயத்துகளிலும் அகவிலைப்படி சேர்த்து வழங்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்து முறையான ஊதியம் வழங்க வேண்டும், தொட்டி சுத்தம் செய்ய தலா ரூ.1000 வழங்க வேண்டும், தூய்மை காவலர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். பஞ்சாயத்து மூலம் தூய்மை காவலர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

கலந்து கொண்டவர்கள்

ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, துணைத்தலைவர் காசி, இணை செயலாளர் டென்சிங், உப்பு தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் சங்கரன், இந்திய கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் முருகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி புறநகர செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் சி.ஐ.டி.யு மாநில செயலாளர் ரசல் ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். மாவட்ட குழு உறுப்பினர் மந்திரமூர்த்தி நன்றி கூறினார்.


Next Story