ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க கூட்டம்


ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க கூட்டம்
x

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்க கூட்டம் நடந்தது.

கரூர்

கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்க சி.ஐ. டி.யு. ஆண்டு பேரவை கூட்டம் தாந்தோணிமலையில் நடைபெற்றது இதற்கு சங்கத்தின் துணைத்தலைவர் கந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தொடக்க உரையாற்றினார். கணேசன் வரவேற்று பேசினார். செயலாளர் முருகேசன் வேலை அறிக்கை வாசித்தார்

கூட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் நிரந்தர பணியிடங்களை தனியார் கைகளில் அளிக்கும் அரசாணைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும்,

தினக்கூலி, சுயக்உதவி குழு, ஒப்பந்த தொழிலாளி என பல்வேறு பெயர்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள், குடிநீர் பணியாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்,

3 ஆண்டுகள் பணி முடித்த தூய்மை பணியாளர்களை சிறப்பு காலம் முறை ஊதியம் பெறும் தூய்மை பணியாளர்களாக மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story