ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.
கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.
பல்வேறு கோரிக்கைகள்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் காரணமாக அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன. ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் சம்பளம் வாங்க வேண்டும், மருத்துவ விடுப்பு, ஈட்டிய விடுப்பு, சிறப்பு நிலை தேர்வு நிலை மற்றும் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி இயக்குனர்கள் அனைவருக்கும் உதவியாளருக்கான ஊதியம் வழங்க வேண்டும், மக்கள் மற்றும் நிர்வாக நிலையை கருத்தில் கொண்டு 25 ஊராட்சிகளுக்கு ஒரு ஊராட்சி ஒன்றியத்தை உருவாக்க வேண்டும், ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தினர் கடந்த 2 நாட்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அலுவலகங்கள் வெறிச்சோடின
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை, செம்பனார்கோவில், குத்தாலம், சீர்காழி, கொள்ளிடம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் அலுவலர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.இதனால் பொதுமக்கள் அலுவலகங்களுக்கு வந்து திரும்பிச்சென்றனர்.