ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 14 Sept 2023 7:00 AM IST (Updated: 14 Sept 2023 7:01 AM IST)
t-max-icont-min-icon

16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

வேலை நிறுத்த போராட்டம்

தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊரக வளர்ச்சித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அனைத்து நிலை பதவி உயர்வுகளையும் உரிய காலத்தில் வழங்க வேண்டும்.

உள்ளாட்சி தணிக்கை நடைமுறைகளில் உள்ள பொருத்தமற்ற நடைமுறைகளை கைவிட வேண்டும் என்பன உள்பட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

675 அலுவலர்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி, நத்தம், சாணார்பட்டி, வத்தலக்குண்டு, குஜிலியம்பாறை, ஆத்தூர், கொடைக்கானல், தொப்பம்பட்டி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், வடமதுரை, வேடசந்தூர், நிலக்கோட்டை ஆகிய 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும் 675 அலுவலர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதேபோல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலகம் மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்துக்கும் பணியாளர்கள் வரவில்லை. வேலைநிறுத்த போராட்டம் காரணமாக அனைத்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டன.

தங்களின் கோரிக்கைகள் ஒரு மாதத்தில் நிறைவேற்றப்படும் என்று ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் உறுதி அளித்துள்ளார். இதனால் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.

அதன் பிறகு கோரிக்கை நிறைவேறாவிட்டால் சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் அலுவலகத்தை அடுத்த மாதம் (அக்டோபர்) 13-ந் தேதி முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலு வலர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story