கிராமப்புற இளைஞர் பயிற்சி முகாம்
மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புற இளைஞர் திறன் பயிற்சி திட்டம் வாயிலாக முகாம் நடத்தப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தீன் தயாள் உபாத்யாயா கிராமப்புற இளைஞர் திறன் பயிற்சி திட்டம் வாயிலாக முகாம் நடத்தப்பட்டது.
இந்த முகாமில் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள 42 ஊராட்சிகளில் இருந்து 5-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த 18 முதல் 35 வயதுள்ள ஆண், பெண்கள் என மொத்தம் 240 பேர் பங்கேற்றனர். இதில் 12 தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் இளைஞர்களின் வேலை திறனை சோதித்து, 1 முதல் 3 மாதம் பயிற்சி அளித்து பணி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக நேற்று 60 பேருக்கு பயிற்சி பெறுவதற்கான ஆணையை திருவள்ளூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினார். இதில் திருவாலங்காடு ஒன்றிய குழு துணை தலைவர் சுஜாதா, ஒன்றிய செயலாளர்கள் மகாலிங்கம், கூளூர் ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.