ரஷிய விஞ்ஞானி திடீர் சாவு


ரஷிய விஞ்ஞானி திடீர் சாவு
x

கூடங்குளத்தில் ரஷிய விஞ்ஞானி திடீரென இறந்தார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ரஷிய நாட்டு நிதி உதவியுடன் தலா 1,000 மெகா மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 2 அணு உலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு 4 அணு உலைகள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதில் 3 மற்றும் 4-வது அணு உலைகளுக்கான கட்டுமான பணியில் ரஷியா விஞ்ஞானிகள் குழு தலைவராக ரஷிய நாட்டைச் சேர்ந்த கிளினின்கோ வேடின் (வயது 55) பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி கிளினின்கோ வேடின் பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து அவரது உடல் தூதரகம் மூலம் ரஷிய நாட்டுக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. கிளினின்கோ வேடின் கடந்த 5 ஆண்டுகளாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story