அறுந்து கிடந்த மின்கம்பியை உரசியதால்மின்சாரம் தாக்கி பெண் பலி


அறுந்து கிடந்த மின்கம்பியை உரசியதால்மின்சாரம் தாக்கி பெண் பலி
x
தினத்தந்தி 30 March 2023 12:15 AM IST (Updated: 30 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அறுந்து கிடந்த மின்கம்பியை உரசியதால் மின்சாரம் தாக்கி பெண் பலியானார்

சிவகங்கை

காரைக்குடி

குன்றக்குடி போலீஸ் சரகம் உ. சிறுவயல் சிவா நகரை சேர்ந்தவர் மாணிக்கம்(வயது 50). இவர் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அடைக்கம்மை(46). இவர் கணவரோடு சேர்ந்து சித்தாள் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இருவரும் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பினர். அதன் பின்னர் அடைக்கம்மை வீட்டுக்கு வெளியே இருந்த விறகு அடுப்பில் சமையல் வேலையை தொடங்கினார். இந்நிலையில் அடைக்கம்மை வீடு வழியாக சென்று கொண்டிருந்த மின்கம்பி அறுந்து அவரது வீட்டு முள்வேலியில் விழுந்துள்ளது. இதனை அறியாமல் அடைக்கம்மை வேலியில் சாய்ந்துள்ளார். இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்து அடைக்கம்மை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story