50 கிடாய்கள் பலியிட்டு விருந்து


50 கிடாய்கள் பலியிட்டு விருந்து
x
தினத்தந்தி 5 April 2023 12:30 AM IST (Updated: 5 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

நத்தம் அருகே கோவில் திருவிழாவில் 50 கிடாய்கள் பலியிட்டு விருந்து அளித்தனர்.

திண்டுக்கல்

நத்தம் அருகே உலுப்பக்குடி கிராமத்தில் உள்ள வேட்டைக்காரன் சுவாமி கோவிலில், ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது. அதன்படி அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், சமீபத்தில் கோவிலில் கிடாய்கள் வெட்டி கறி விருந்து நடந்தது. இந்தநிலையில் 2-வது முறையாக இந்த ஆண்டில் நேற்று அந்த கிராம மக்கள், கிடாய் விருந்து அளித்தனர்.

இதையொட்டி நேற்று முன்தினம் இரவு சுவாமிக்கு பொங்கல் வைத்து விழா தொடங்கியது. இதைத்தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்திய 50 கிடாய்கள் பலியிடப்பட்டன. அதன்பின்னர் கோவில் வளாகத்திலேயே இறைச்சி சமைக்கப்பட்டது. இதேபோல் சாதம் சமைத்து குவித்து வைக்கப்பட்டது. அதிகாலை 5.45 மணி அளவில் சுவாமிக்கு படைத்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. அதன்பிறகு விருந்து தொடங்கியது. இதில் ஆண்கள் மட்டுமே பங்கேற்றனர். இவர்கள் தாங்கள் கொண்டு வந்த பாத்திரங்களில் சாதம், ஆட்டுக்கறி குழம்பு ஆகியவற்றை தங்களது வீடுகளுக்கு வாங்கி சென்று குடும்பத்துடன் சாப்பிட்டனர்.

முன்னதாக இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் எம்.எல்.ஏ. உள்பட ஏராளமான சிறுவர்கள், ஆண்கள் பங்கேற்றனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story