ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா
விருத்தாசலம் ஜெகமுத்து மாரியம்மன் கோவிலில் செடல் திருவிழா நடைபெற்றது.
விருத்தாசலம்.
விருத்தாசலம் ஜங்ஷன் சா.லையில் ஜெகமுத்து மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் செடல் திருவிழா கடந்த 10-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம், தேன் உள்பட பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சிறப்பு வழிபாடு நடத்தி பக்தர்கள் பால்குடம் எடுத்தும், உடலில் செடல் குத்தியும் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கோவிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.