பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி


பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 8 July 2023 12:15 AM IST (Updated: 8 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

திருவாரூர்

திருவாரூரை அடுத்த அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் திருவாரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தின் சார்பில் பெண்களுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) சுதர்சனன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் எவையெல்லாம் பாலியல் சீண்டல் என்பதையும், சீண்டலுக்கு உள்ளாகும் பெண்களின் மன அழுத்தமும், அதனால் ஏற்படும் சமூக சீரழிவு பற்றியும், எந்த தவறு நடந்தாலும் அதில் பாதிக்கப்படுவது பெண்களாகவே இருக்கிறார்கள் என்று போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பெண் போலீஸ் கவிதா, தமிழ் ஆசிரியர் தமிழ்காவலன், ஆசிரியை ஜோஸ்பின் அமலி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை டெய்சி நன்றி கூறினார்.


Next Story