பணியில் ஈடுபடுவர்களுக்கு பாதுகாப்பு உபரணங்கள் வழங்க வேண்டும்
பணியில் ஈடுபடுவர்களுக்கு பாதுகாப்பு உபரணங்கள் வழங்க வேண்டும் என்று மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம் வேலூர் வட்ட கிளை பொதுக்குழு கூட்டம் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு வட்ட தலைவர் டி.கிஷோர்குமார் தலைமை தாங்கினார். செயலாளர் கு.சுந்தரராஜன் ஆண்டறிக்கை வாசித்தார். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் கே.எஸ்.அக்னிக்பாலக் வாசித்தார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சி.கண்ணன், மாநில பொது செயலாளர் மு.சுப்பிரமணியன், பொருளாளர் வி.முத்துசாமி, அமைப்பு செயலாளர் க.வீராச்சாமி, மண்டல செயலாளர் கோ.சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
பாதுகாப்பு உபகரணங்கள்
கூட்டத்தில், மின்துறை பொதுத்துறையாக தொடர்ந்திட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தொழிலாளர் நல சட்டங்களை பாதுகாத்திட வேண்டும். 2009-ம் ஆண்டு சேர்ந்த பணியாளர்களுக்கு வழக்கு சம்மந்தமாக நடவடிக்கைகளை துரிதப்படுத்த அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும். 56 ஆயிரம் காலிப்பணியிடங்களை தொழில்நுட்ப பயிற்சி முடித்தவர்களை கொண்டு நிரப்பிட வேண்டும். தளவாடப்பொருட்கள் இல்லாமல் பணி செய்ய அழுத்தம் தருவதை கைவிட வேண்டும்.
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் பணி செய்ய அழுத்தம் கொடுப்பதை கைவிட்டு, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும். கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட சலுகை உள்ளிட்ட இதர சலுகைகளையும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.