மின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள மின் பணியாளர்களுக்கு பாதுகாப்பு பயிற்சி நடந்தது.
சிக்கல்:
நாகை அருகே சிக்கலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாகை மாவட்டம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக, நாகை தெற்கு கோட்டத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் மின்சார பாதுகாப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சிக்கு நாகை கோட்ட செயற்பொறியாளர் சேகர் தலைமை தாங்கினார். நாகை தெற்கு உதவி செயற்பொறியாளர் ராஜமனோகரன் முன்னிலை வகித்தார். மின் பணியாளர்கள் கையுறை அணிந்து மின்சாரத்தை நிறுத்த வேண்டும்.மின்சாரம் நிறுத்தம் செய்தததை உறுதிப்படுத்திய பின்பு எர்த் ராடு பயன்படுத்த வேண்டும். மின் கம்பம் மற்றும் மின்மாற்றிகளில் பணிபுரியும் போது இடுப்பு கயிறு அணியாமல் பழுது நீக்கம் செய்யக்கூடாது. மின்சாரத்தை நிறுத்தம் செய்த பிறகு மின் கம்பிகள் மேல் உள்ள மரக்கிளைகளை அகற்ற வேண்டும்.மின் கம்பத்தில் வேலை செய்யும் போது செல்போன் பயன்படுத்த கூடாது என்பன உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கி கூறப்பட்டது. பின்னர் மின் பணியாளர்கள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.இதில் இளம் மின் பொறியாளர்கள் ஜெயா, பாபு, ராட்சன், உதவி மின்பொறியாளர்கள், மற்றும் சிக்கல், கீழ்வேளூர் திருப்பூண்டி, வேளாங்கண்ணி பிரிவு அலுவலகத்தில் பணிபுரியும் மின் பணியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.